இணையப் பாவனை - ஒரு சர்வதேசப் பார்வை -

இணையம் மனித வாழ்வுக்கு இன்றியமையாததாகி விட்டது. நாளுக்கு நாள் அதனது தேவையும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. இணைய அறிவை வைத்து ஒரு நாட்டின் வாழ்க்கைத் தரத்தை கணிக்கும் அளவுக்கு மாறிவிட்டது.
அந்தவகையில், சர்வதேச ரீதியில் அண்ணளவாக 12 பில்லியன் மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இவர்களுள் பிராந்திய ரீதியில் பின்வரும் வீதத்தில் இணையத்தைப் பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன:
- ஆசியா 37%
- ஐரோப்பா 27%
- வடஅமெரிக்கா 20%
- தென் அமெரிக்கா 9%
- ஆபிரிக்கா 3%
- மத்திய கிழக்கு 2%
- அவுஸ்திரேலியா 2%
சர்வதேச நாடுகளின் வரிசையில் 181.9 மில்லியன் பாவனையாளர்களை அமெரிக்கா முதலிடம் பெற்றிருக்கிறது. பணத்திலேயே மிதக்கும் அமெரிக்கவர்கள் தனது சிறுவயது முதலே இணையப் பிரியர்களாக இருக்கின்றனர்.
அண்ணளவாக ஒரு மாதத்தில் 31.6% மான நேரத்தை இணைப் பாவனைக்காக செலவிடுகின்றனர். இதில் கிட்டத்தட்ட 132 மில்லியன் (3/4) அமெரிக்கர்கள் "இணைய வீடியோ கிளிப்ஸ்'களைப் பார்க்கின்றனர் எனவும் இவர்களுள் 64.9 மில்லியன் பேர் Google ஐயும் 35.0 மில்லியன் பேர் Yahoo ஐயும் பயன்படுத்துகின்றனர் எனவும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
ஐரோப்பாவில் சுமார் 52 மில்லியன் இணையப் பாவனையாளர்கள் காணப்படுகின்றனர். 35.1 மில்லியன் இணையப் பாவனையாளர்களைக் கொண்ட லண்டனில் 25% மானோர் 15-25 வயதிற்குற்பட்டவராவர். ""ஐரோப்பாவில் 15-21 க்கும் இடைப்பட்ட வயதினரே அதிகமாக இணைத்தைப் பாவிக்கின்றனர். அவர்களின் வாழ்க்கையே இணையம் என கருதும் அளவுக்கு அவர்களின் பாவனை இருக்கிறது'' என இணைய ஆய்வாளரொருவர் குறிப்பிடுகிறார்.
ComScore Network எனும் நிறுவனத்தின் அண்மைய ஆய்வின்படி, 2007 ஜனவரி மாதம் முழுவதுமாக கனடா 39.6% மான நேரத்தையும் இஸ்ரவேல் 37.4% மான நேரத்தையும் இணையப் பாவனைக்காக செலவழித்துள்ளது. லண்டன் 31.2% தை இணையப் பாவனைக்காக செலவழித்திருக்கிறது. உலகின் அதிக சனத்தொகையை கொண்டுள்ள ஆசியா கண்டமானது, அண்ணளவாக 43 கோடி இணையப் பாவனையாளர்களைக் கொண்டுள்ளது. இதில் சீனா 133.5 மில்லியன் பேர் இணையத்தைப் பாவிக்கின்றனர். தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்கும் ஜப்பானும் 1/10 என்ற வீகிதாசாரத்தில் பாவனையாளர்களைக் கொண்டுள்ளது.
அண்டைய நாடான இந்தியா அதனது 112 கோடி சனத்தொகையில் கிட்டத்தட்ட 40 கோடி இணையப் பாவனையாளர்களைக் கொண்டுள்ளதுடன், பாகிஸ்தான், மலேசியா, இந்தோனே´யா போன்ற நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு இணைய வசதிகளை மக்களுக்கு வழங்கி வருகின்றன.
எழுத்தறிவில் 93%ப் பெற்று தெற்காசியாவில் முன்னணி வகிக்கும் இலங்கை கணினியறிவில் 10%ஐ மட்டுமே பெற்றுள்ளது. இதில் 3 இலட்சத்து 50 ஆயிரம் பேர் இணைத்தைப் பயன்படுத்துகின்றனர் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவர்கள் இலங்கையின் மொத்தச் சனத்தொகையில் 1/56 சதவீதத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published in Metro Weekly on Feb, 2008

