Saturday, January 3, 2009

Mumbay Attack


மும்பை தாக்குதலும் வல்லரசுகளின் எஜன்டாவா?!
ஹஸீப் ரஸீத்
இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பைக்குள் இனந்தெரியாத ஆயுததாரிகள் கடல்வழியாக நுழைந்து புகையிரத நிலையம், வைத்தியசாலை, யூதர்களின் மையம், பிரபல ஐந்து நட்சத்திர உணவகங்கள் என சுமார் 10 பிரத்தியேக இடங்களின் மீது நவம்பர் 26-28 வரை தொடர் தாக்குதல் ஒன்றை நடத்தினர். ஒபரோய், தாஜ்மஹால் பெலஸ் போன்ற பிரபல உணவகங்களில் நடைபெற்ற தாக்குதல் சர்வதேசத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சுமார் 62 மணிநேரங்களாக தீவிரவாதத் தாக்குதல்... சுமார் 195 பேர் படுகொலை... சுமார் 300 பேர் படுகாயம்... அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற 22 சர்வதேச பிரஜைகள் பலி... 9 தீவிரவாதிகள் ஸ்தலத்தில் சுட்டுக்கொலை... போன்ற அதிர்ச்சித் தகவல்களை நிமிடங்கள்தோறும் வெளியிட்ட ஊடகங்களுக்கு, இத்தாக்குதலில் ஒரே குடும்பத்தில் நால்வர் உட்பட மொத்தமாக 42 முஸ்லிம்கள் கொல்லப்பட்டும்; சத்ரபதி சிவாஜி புகையிரத நிலையத்தில் மட்டும் 22 முஸ்லிம்கள் கொல்லப்பட்டும் சாதி-இன-மத வேறுபாடுகளின்றி இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட உண்மை தெரியாது போனதா? இல்லை, பக்கசார்பாக நடந்து கொண்டனவா?

அவ்வாறே,
  • மூன்று நாட்களாக தாக்குதல் நடத்துமளவு ஆயுதங்களை தீவிரவாதிகள் சுமந்து வந்தார்களா? இல்லை, தாக்குதலின்போது அவர்களுக்கு அவ்வப்போது ஆயுதங்கள் வழங்கப்பட்டதா?
  • வாய்ந்த இந்திய பாதுகாப்புப் படையினர் இருக்க, தீவிரவாதிகள் மும்பைக்குள் கடல்வழியாக எவ்வாறு நுழைந்தனர்? அதுவரையும் படையினர் தூங்கிக் கொண்டிருந்தார்களா?
  • நிகழ ஒரு மாதத்துக்கு முன்னே அமெரிக்காவில் தகவல் கசிந்து, அமெரிக்கா இரு தடவைகள் இந்தியாவுக்கு அறிவித்தாக கூறப்படுகிறது. பாதுகாப்பைப் பலப்படுத்தாமல் அசமந்தப் போக்கில் மத்திய அரசாங்கம் நடந்து கொண்டது ஏன்?
  • மணிக்கட்டில் சிவப்புப் பட்டி கட்டியிருந்த புகைப்படங்கள் வெளியாகின. சிகப்புப் பட்டிக் கலாசாரம் ஆர்.எஸ்.எஸ். க்கு உரியதே! யாரவர்கள்?
  • இராணுவமோ அல்லது ஊடகங்களோ தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளை உடனடியாக காட்டாதது ஏன்?
  • இரு தீவிரவாதிகள் யூதர்களின் தங்குமிடத்தில் குறித்த நாளுக்கு முன்னரே தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தாக்குதலுக்கு யூதர்களும் ஆதரவா?

போன்ற சந்தேகங்களுக்கு சர்வதேச மீடியாக்கள் இதுவரை விடைகூறவில்லை; சர்வதேசமும் இவற்றுக்கு விடைகாண முற்படுவதாகவும் தெரியவில்லை.

இத்தாக்குதல் நிகழ்வுகள் அனைத்தையும் ஒரு சினிமாக் காட்சி போல் சித்திரித்து முழு உலகையுமே வியப்புக்கும் அதிர்ச்சிக்கும் ஆளாக்கிய ஊடகங்கள், எந்தவொரு சாட்சியமோ, தடயமோ இல்லாதபோதும் முஸ்லில்கள் மீதும் பாகிஸ்தான் மீதும் வழமைபோல் பழிசுமத்தின. இதனால் இந்தியாவில் பாரியதொரு இனக் கலவரம் உருவெடுக்கும் என பொதுமகன் உட்பட அரசியல்வாதிகள், அரசியல் ஆய்வாளர்கள் போன்ற அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், எதிர்மறையாக அனைத்து இந்தியர்களும் கவலை, சோகம், ஆவேசம் என அனைத்து உணர்வுகளையும் சாதி-இனம்-மதம் வேறுபாடின்றி ஐக்கியமாக பகிர்ந்து கொண்டு படுகாயமுற்றோருக்கு உதவியதும்; இந்து-முஸ்லிம் உறவு முன்னரைப் போன்றல்லாது பலமாக இருப்பதையுமே நிகழ்வுகள் எடுத்துக்காட்டின.


எனினும், மும்பைத் தாக்குதல் சுத்தமான தீவிரவாதம் என்பதில் சந்தேகமே இல்லை. இதனை, "இதுபோன்ற நிகழ்வு அமெரிக்காவிலோ, இந்தியாவிலோ, பாகிஸ்தானிலோ, ஈராக்கிலோ நிகழ்ந்தாலும் அது தீவிரவாதமே'' என பாகிஸ்தான் பிரதமர் கிளானி தெரிவித்தார்.

சர்வதேசத்தின் சீற்றத்தால் இந்திய முஸ்லிம்கள் அச்சமுற்றிருந்தவேளை இந்திய முஸ்லிம் தலைமைகள் இது குறித்து தீர்க்கமான முடிவுகளையே எடுத்தன.
தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்ட 9 தீவிரவாதிகளையும் முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்ய இந்திய பாதுகாப்புத் துறை கோரியபோது, "தீவிரவாதம் இஸ்லாத்துக்கு முரணான செயல் என்பதால் அவர்கள் முஸ்லிம்கள் அல்ல'' என மும்பை முஸ்லிம் தலைமைகள் அக்கோரிக்கையை மறுத்து விட்டன.

அத்தோடு, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், அனைத்து இந்திய முஸ்லிம் மஜ்லிஸ், ஜமாஅத் அல்உலமா ஹிந்த் முதலான அமைப்புகளை உள்ளடக்கிய Coordination Committee of India இத்தீவிரவாத செயலை வன்மையாகக் கண்டித்துள்ளது. தமது செயலை நியாயப்படுத்தவே இஸ்லாத்தின் பெயரை தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர் எனவும் இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் இன-மத வேறுபாடின்றி உதவும்படியும் அவ்வமைப்பு முழு இந்தியர்களையும் வேண்டிக் கொண்டது.

அத்தோடு, ஈதுல் அழ்ஹா குத்பாவின் போது மும்பை தாக்குதலின் மீதான கண்டத்தை தெரிவிக்கக் கோரி அனைத்து இமாம்களுக்கும் அவ்வமைப்பு வேண்டுகோள் விடுத்தது. இதனாலேயே சுமார் 1.5 பில்லியன் இந்திய முஸ்லிம்களும் ஈதுல் அழ்ஹாவை நிம்மதியாக கொண்டாட முடிந்தது எனலாம்.


தீவிரவாதத்தை முடக்கும் சக்திகளாக போலி வே­ம் தரித்த அமெரிக்கா, இஸ்ரேல், லண்டன் போன்ற வல்லரசுகள் ஊதிய மகுடிக்கு ஆடிய இந்தியா, ""இத்தாக்குதலின் சூத்திரதாரிகள் பாகிஸ்தானியர்தான். உடனடியாக தீவிரவாதிகளின் கொட்டத்தை பாகிஸ்தான் அடக்க வேண்டும். கைதுசெய்தோரை உடனே இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்'' என பாகிஸ்தானை எவ்வித ஆதாரமோ தடயங்களோ இன்றி மிரட்டத் தொடங்கியது.

அதனோடு அமெரிக்காவும் இஸ்ரேலும் பலத்த அழுத்தங்களை பாகிஸ்தானுக்கு கொடுக்கத் தொடங்கின.
இதனால் பாகிஸ்தான் கைதுநடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி ஜமாஅத்தே-தஃவா மற்றும் அஸ்கர்-ஏ-தைபா அமைப்புகளின் நடத்துனர் ஹாபிழ் முஹம்மத் சஈதையும் அவரது 4 அதிகாரிகளையும் பாக். புலனாய்வுப் பிரிவால் கைதுசெய்து வீட்டுக் காவலில் வைத்தது. இதற்கிடையில் ஷேஹ் ரஹ்மான் லக்வி, சரார் ஷா போன்ற முக்கிய அங்கத்தவர்களும் கைதாகினர். ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் ஏழைகளுக்கு பாடசாலைகள்-மத்ரஸாக்கள்-வைத்தியசாலைகள்- நலன் புரிநிலையங்கள் போன்றவற்றின் மூலம் தோள்கொடுத்துவரும் ஜமாஅத்-ஏ-தஃவா அமைப்பின் செயலகங்கள் முத்திரை இடப்பட்டும் அங்கத்தவர்களின் சொத்துக்கள், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டும் அதன் செயற்பாடுகள் அனைத்தையும் ஸ்தம்பிக்க வைத்தது பாக். அரசாங்கம் நாட்டு மக்களுக்கு செய்கின்ற இராஜ துரோகம் என்று பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர் காழி ஹுஸைன் அஹ்மத் நோர்வே, டென்மார்க், ஜேர்மன், இத்தாலி போன்ற மேற்கு நாடுகள் கலந்து கொண்ட அண்மைய மாநாடொன்றில் தெரிவித்தார். தாக்குதலின்போது இந்திய அதிரடிப் படையினரால் கைதான கபாப் என்பவர் அஸ்கர்-ஏ-தைபா அமைப்பின் அங்கத்தவர் என விசாரணையின் மூலம் தெரிய வந்ததாக தாக்குதல் நடைபெற்றபோது ஆதாரமின்றி முஸ்லிம்கள் மீது பழிசுமத்திய அதே ஊடகங்களே இத்தகவலையும் தெரிவித்திருக்கின்றன?! ஆனால், இவர் 2006ம் ஆண்டு இந்திய ஏஜென்ஸிகளால் நேபாளிலிருந்து கடத்திச் செல்லப்பட்டதாகவும் இதுகுறித்து நேபாள உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டதாகவும் முதல்வர் பாரூகின் அண்மைய அறிக்கை குறிப்பிடுவதாக பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமியின் செயலாளர் முனவ்வர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இந்தியா விடுத்த ஆதாரமற்ற கோரிக்கைக்கு செவிசாய்த்து சுமார் 24 மணிநேரத்துக்குள் அஸ்கர்-ஏ-தைபா மற்றும் ஜமாஅத்தே தஃவா அமைப்புகளை தடைசெய்து, ஹாபிஸ் முஹம்மத் சஈத், ஸகிஉர் ரஹ்மான் முதலான நான்கு தலைவர்களை தனது பயங்கரவாதப் பட்டியலிலும் சேர்த்துள்ளது ஐ.நா. அதன் உறுப்பு நாடுகளிலுள்ள அவ்வமைப்புகளின் கிளைகளை மூடுதல், உறுப்பினர்களின் வெளிநாட்டுப் பயணங்களைத் தடைசெய்தல் முதலானவற்றை அமுல்படுத்துமாறும் அது ஆணை பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கோட்டை என இந்தியா மூச்சுக்கு முன்னூறு முறை உச்சரித்தாலும் இந்தியாவில் மட்டும் நூற்றுக்கணக்கான ஆயுத அமைப்புகள் இயங்கி, ஆயிரக்கணக்கான தீவிரவாத பயிற்சிப் பாசறைகள் இந்திய இளைய சமூகத்துக்கு இனவாதத்தை ஊட்டி வருகின்றன.
இந்துத்துவ இனவாத கும்பல்களைக் கொண்ட சுமார் 14 பிரிவினைவாத இயக்கங்கள் இந்தியாவில் செயற்படுகின்றன.


உண்மையில், நரேந்திர மோடி, ஏ.பீ. வாஜ்பாயி, எல்.கே. அத்வானி போன்ற இனவாத அரசியல்வாதிகளைக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்., இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்கள் போன்றோருக்கு எதிராக இனப் படுகொலைகளை நீண்டகாலமாக அரங்கேற்றி வருகின்றது.

7 மில்லியன் தொண்டர்களைக் கொண்டு நாடுபூராவும் 45 ஆயிரம் கிளைகளைக் கொண்டு அவ்வமைப்பு இயங்கி வருகிறன்றமை குறிப்பிடத்தக்கது.


இவ்வமைப்பு இதுவரை 2002ல் குஜராத் இன ஒழிப்பு, டிச. 1992-ஜன. 1993 வரை மும்பையில் நடந்த இந்து-முஸ்லிம் இனமோதல், சுமார் 15 வருடங்களுக்கு முன் பாபரி மஸ்ஜித் விவகாரத்தின் சீற்றம், காஷ்மீர் பிரச்சினை போன்ற நீண்டதொரு இனஒழிப்பு எஜன்டா மூலம் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்திருப்பது சர்வதேசமும் அறிந்ததே.

இவ்வாறு குஜராத், அயோத்தி, அஸாம், காஷ்மீர் போன்ற மாநிலங்களை கொலைக்களமாக மாற்றிய ஆர்.எஸ்.எஸ். இத்தாக்குதலின் பின்னணிச் சக்தியாக இருக்கலாம் என்ற சந்தேகம் கிளம்பியிருக்கிறது. சிலவேளை, ஈராக், ஆப்கானை யுத்த களமாக மாற்றிய அமெரிக்க உளவு நிறுவனம் CIA உம் சுமார் 60 வருடங்களைத் தாண்டியும் பலஸ்தீனுக்குள் அத்துமீறி அராஜகம் புரியும் இஸ்ரேலின் உலவு நிறுவனம் Mosaad உம் ஆர்.எஸ்.எஸ். இன் இனவாதத்துக்கு கைகொடுத்திருக்கலாம்.

இவ்வருடம் மட்டும் இந்தியாவில் சுமார் 10 பெரும் தொடர்குண்டு வெடிப்பு நிகழ்வுகளுக்கு சந்தேகத்தின்பேரில் முஸ்லிம் வாலிபர்களே கைதுசெய்யப்பட்டு, போலிக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கொடுமைப்படுத்தப்படுகின்றனர்.

ஆனால், இத்தகைய தாக்குதல்களின் பின்னணியில் செயற்படுவோர் இந்துத்துவவாதிகள் என்ற உண்மையை மதசார்பற்ற அமைப்புகள்கூட ஏற்றுக் கொள்கின்றன.
கடந்த செப்டம்பரில் மலிங்கன் பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் தொடர்புடையோர் என இரு இராணுவத் தளபதிகள் உட்பட அறுவர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களுள் Central Hindu Military Education Society இன் கீழ் இயங்கும் Bonsala Military School ஐச் சேர்ந்த ஒரு இராணுவ அதிகாரியும் உள்ளடங்குகிறார்.

இவ்வாறான பல அதிர்ச்சித் தகவல்கள் திரைமறைவில் இருக்கின்றன.
ஏனெனில், கந்தகார் சிறை உடைப்பையடுத்து தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்குள் நுழைந்திருப்பதாகக் கூறி பாகிஸ்தானை தீவிரவாதிகளின் கோட்டை என சித்திரித்து ஈராக்கில் வாபஸ் பெற்ற தனது படையை பாகிஸ்தானிலும் ஆப்கானிலும் நிலைநிறுத்தும் அங்கீகாரத்தை சர்வதேசத்திடம் பெற்றுக் கொள்ளும் பகீரத முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. செப். 11 தாக்குதலைக் காரணங்காட்டி ஆப்கானைத் தாக்கியதுபோல மும்பைத் தாக்குதலைக் காரணங்காட்டி பாகிஸ்தானைத் தாக்குவதற்கான சர்வதேச வல்லரசுகளின் எஜன்டாவின் அடுத்த நிகழ்ச்சியே மும்பைத் தாக்குதலாக இருக்கும்!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home