Saturday, January 3, 2009

Sudan



அமெரிக்கா ஊதிய மகுடிக்கு!
ஆடுவாரா சூடான் அதிபதி?

- ஹஸீப் ரஸீத்


இன ஒழிப்பு மற்றும் போர்த் தொடுப்பை மேற் கொண்டார் என்ற குற்றச் சாட்டின் பேரில் சூடான் ஜனாதிபதி உமர் அல்பஸீர் மீது பிடியாணை பிறப்பிக் குமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் லூயிஸ் மொரெனோ கடந்த ஜூலை 14ம் திகதி சர்வதேச நீதிபதிகளைக் கோரியுள்ளார். இது சூடான் அரச ஆதரவாளர்களை உஷ்ணமடையச் செய்துள்ளதோடு ஆபிரிக்க ஒன்றியத்தையும் இக்கட்டான நிலைக்கு ஆளாக்கியுள்ளது.


பூர், மஸாலிட் மற்றும் ஜஹாவா இனத் தாரை படுகொலை செய்தமை, குறுங் காலத்துக்குள் குறித்த இனங்கள் ஒழிந்துபோக ஏதுவான உடல்-உள ரீதியான மறைமுக தீங்குகளை இழைத்தமை, தார்பூரில் அப்பா விச் சிவிலியன்கள் மீது தாக்குதல்களை மேற் கொண்டமை, பலவந்தமாக மக்களை அகதி களாக்கியமை, பாலியல் வல்லுறவுகள்-சித்திர வதைகள்-சூறையாடல் மேற்கொண்டமை முதலானவற்றால் சுமார் 3 இலட்சம் பேரை படுகொலை செய்தும்; சுமார் 2.5 மில்லியன் பேரை அகதிகளாக்கியமைக்காகவுமே ஜனாதிபதி உமர் அல்பஸீர் மீது பிடியாணை பிறப்பிக்குமாறு லூயிஸ் வேண்டியுள்ளார்.


சர்வதேச பாதுகாப்புச் சபையின் பணிப் புரையின் பேரில் கோரப்பட்ட இப்பிடியா ணையை 3 சர்வதேச நீதிபதிகள் கொண்ட குழு பரிசீலிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. சூடானிய பாதுகாப்புக்காக ஐக்கிய ஆபிரிக்க-ஐ.நா கூட்டுப் படைக்கான துருப் புகளை அனுப்பியுள்ள அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மன் போன்ற மேற்கு நாடுகள் இப் பிடியாணையை உடனடியாக நிறைவேற்று மாறு சர்வதேச நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளன.


இப்பிடியாணை நிறைவேற்றப்படுமானால், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒரு நாட்டு ஜனாதிபதிக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டு அவர் கைதுசெய்யப்படுவது சர்வதேச அரங்கில் இதுவே முதல் தடவையாக இருக்கும். இதேநேரம், ""இப்பிடியாணையின் பேரில் சூடான் ஜனாதிபதி கைதுசெய்யப்படு வாராயின், தார்பூர் விவகாரத்தில் களமிறங்கியிருக்கும் சர்வதேச சமாதானத் தரகர்கள் நிச்சயம் விரட்டியடிக்கப்படுவர். இதற்கு நாம் பொறுப்புதாரிகள் அல்ல. நாம் இக்குற்றப் பிரேரணையை முற்றாக நிராக ரிக்கிறோம். எந்தவொரு விசா ரணைக்கும் பதிலளிக்க எமது ஜனாதிபதியை நாம் அனும திக்கமாட்டோம்'' என சூடான் ஜனாதிபதியின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.


""சூடான் அரசாங்கம் இதற்கு உடன்பட்டு, தனது நாட்டு ஜனாதிபதியை தனது கரங்களினாலேயே ஒப்படைக்கவும் அது கடமைப்பட்டுள்ளது'' என சர்வதேச பாதுகாப்புச் சபை அறிக்கை விட்டிருக்கிறது. சர்வதேச நீதிமன்றில் அங்கம் வகிக்காத அமெரிக்கா இப் பிரேரணையை விரைவு படுத்துமாறு அச்சபையை வலியுறுத்தி வருவது ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்தியுள்ளது.

எனினும், புதியதொரு நீதிமன்றத்தினூடாக இவ்விசாரணையை நடத்த ஆபிரிக்க ஒன்றியம் இணங்கியுள்ளதாக அரபு லீக் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், தென்னாபிரிக்கா ஜனாதிபதி தபூ மெகி-எகிப்து ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் இடையில் இவ்விவகாரம் குறித்த செய்தியாளர் மாநாடு அண்மையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்றது. இதில், இப்பிடியாணைக்கான விசாரணை களை இன்னும் ஒரு வருடத்துக்கு தாமதிக்கு மாறு இரு பெரும் தலைவர்களும் ஒன்றிணைந்து வேண்டிக் கொண்டனர்.


அத்தோடு, ""தற்போது சூடுபிடித்திருக்கும் தார்பூர் மோதல்களை தணிப்பது மட்டு மன்றி, 2005ல் வட-தென் சூடான் தலைமைத் துவங்களுக்கு இடையில் கைச்சாத்தான உடன்படிக்கையை மீண்டும் நடைமுறைப்படுத்தும் நோக்கத்தையும் இப் பிரேரணை யைத் தாமதிக்கும் கோரிக்கை நோக்காகக் கொண்டுள்ளது'' என இரு நாட்டுத் தலைவர்களும் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. இவ்வாறே லிபியாவும் தென்ஆபிரிக்காவும் இணைந்து பUர் மீதான பிடியாணையை ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்குமாறு வேண்டி அறிக்கை ஒன்றை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளன.

இதேநேரம் கடந்த ஜூன் 23ம் திகதி ஜனாதிபதி பஸீர் பலத்த பாதுகாப்புடன் வட தார்பூர் பகுதிக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அங்கு சுமார் 10 ஆயிரம் ஆதரவாளர்களுக்கு முன்னிலையில் ஜனாதிபதி பஸீர் பின்வரு மாறு உரையாற்றினார்:""நாம் சமாதானத்தையே விரும்புகிறோம். எமக்கு சமாதானம்தான் வேண்டும். தார்பூரில் சமாதானத்தைக் கொண்டுவர முடியுமானவர்கள் நாமே. எமது இச் செய்தியை சர்வதேச சமூகத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். நாம் இக்குற்றச்சாட்டை பொருட்படுத்த வில்லை.


இந் லூயிஸுக்குப் பின்னால் யார் இருக்கிறார் என்பதை நாம் நன்கறிவோம். ஏனைய நாடுகளைப் போன்று எம்மையும் சோரம் போக வைக்க அச்சக்திகள் முனைகின் றன. அது ஒருபோதும் நடக்காது.''மத்திய கிழக்கு-ஆபிரிக்கப் பிராந்திய எண்ணெய் வளத்தைச் சுரண்ட திட்டம் தீட்டிய புஷ் நிருவாகம், ஈராக்கை தாக்கிய ழித்து விட்டு, அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த சத்தாம் ஹுஸைனையும் இன ஒழிப்பு குற்றம் என தூக்கிலிட்டது. அமெரிக்காவின் இப்போலிக் குற்றசாட்டுப் பட்டியலின் அடுத்த நகர்வுதான் இந்த பUர் என்பது வெள்ளிடையானதே. இதன் பின்னணியிலேயே, 2003ல் உமர் அல்பஸீர் சூடான் ஜனாதிபதியாக கையேற்ற தோடு, தனது செல்லக் குழந்தையான சல்வா கிர்ரை அரசாங்கத்துக்கு எதிராகப் போராடி வந்த சூடான் விடுதலை இயக்கத்தின் தலைவராக மாற்றி, இவரைக் கொண்டு வட-தென் சூடானை கூறுபோட்டுக் கொள்ளவும் திட்டம் தீட்டி அதற்கான நடவடிக்கைக ளிலும் இறங்கியது அமெரிக்கா.


இன்னொரு புறத்தில் தார்பூர் பகுதியில் வசிக்கும் பழங்குடிகளை இன வெறி, கோத்திர வெறி முதலான நச்சுவிதைகளை அவர்களிடையே விதைத்து அதில் வெற்றியும் கண்டது. சுமார் 30 க்கும் அதிகமான மாஸோனியா போன்ற கிறிஸ்தவ அமைப்புகளை தார்பூரில் நிறுவி ஸியோனிஸக் கொள்கை களையும் அமெரிக்கா பரப்பியது.அத்தோடு, சூடானைச் சூழவுள்ள கிறிஸ்தவ நாடுகளைப் பயன்படுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு பண ரீதியில் உதவி செய்து அரசாங் கத்துக்கெதிரான பாரிய எதிர்ப்பலைகளை கிளப்பி நாட்டை கூறுபோட முனைந்தது. இறுதியில் அதில் வெற்றியும் கண்டது.இத்தகைய பாரிய அழுத்தங்களை சந்திக்க முடியாத ஜனாதிபதி உமர் அல்பஸீர், ஈற்றில் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்துக்கு இணங்க வேண்டிய நிர்ப்பந்த நிலைமை தோன்றி, 2005ம் ஆண்டு தேர்தலில் 450 அங்கத்தவர் களைக் கொண்ட சூடான் பாராளுமன்றத் தில் 30%ஆன ஆசனங்கள் சூடான் விடுதலை இயக்கத்துக்கு கிடைக்கும் சந்தர்ப்பம் அமைந்தது.

இவ்வாறான அமெரிக்க பின்புல சதிகளி னால் 4.2 மில்லியன் தார்பூரியர் பலவிதத் திலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2.1 மில்லியன் பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந் துள்ளனர். சுமார் 2 இலட்சத்து 34 ஆயிரம் பேர் சாட்டில் மட்டும் அகதிகளாக வாழ்கின் றனர். 2.4 மில்லியன் பேர் நேரடியாக மனிதாபிமான உதவிகளைப் பெறுவதாக ஐ.நா. தகவல்கள் தெரிவிக்கின்றன.


இப்படி மேற்கினதும் கிறிஸ்தவ சக்திகளினதும் சூழ்ச்சிகளால் உருவானதே தார்பூரினதும் முழு சூடான் நாட்டினதும் நிலையாகும். இதன் ஓரங்கமாகவே, இஸ்லாமிய ச­ரீஅத்தின் அடிப்படையில் நாட்டை வழிநடத்த முற்படும் உமர் அல்பஸீர் மீதான நெருக்கடி தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதனை அவரும் சூடான் அரசாங்கமும் எப்படி எதிர்கொள்ளப் போகின்றனர் என்பது ஒரு முக்கிய வினா.

உமர் அல்பஸீர் மீது சுமத்தப்பட்டுள்ளது போன்று பலநூறு மடங்கு குற்றச்சாட்டுகளை அமெரிக்க-ஐரோப்பிய-இஸ்ரேல் ஆதரவு நாட்டுத் தலைவர்கள் மீது சுமத்தும் அளவுக்கு இந்த உலகில் எவ்விதமான மனிதநேயத்துக்கு எதிரான வன்முறைகளும் இடம்பெறவில் லையா என்பது இன்னொரு முக்கிய வினா!

தற்போது அணு உலைக் களஞ்சியமாக - ஈரான், அல்கைதாவின் புகலிடமாக- பாகிஸ் தான், இன ஒழிப்பு தலைமைத்துவமாக- சூடான் என முஸ்லிம் நாடுகளை வரிசைப்படுத்தி சர்வதேச அரங்கில் அவற்றை பயங்கர வாதிகளாகக் காட்டி வருகிறது. புஷ்-கொண்ட லீஸா வரைந்த வெளிநாட்டுக் கொள்கை. ஜனவரி 2009 க்கு பின் காலாவதியாகப் போவது தெரிந்து, அவற்றை விரைவாக நடை முறைப்படுத்த பகீரதப் பிரயத்தனம் எடுக்கும் புஷ் நிருவாகத்தின் ஒவ்வொரு நகர்வும் உலகறிந்ததே!

Publised in Engal Thesam on Aug - 1-14

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home